Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அமாவாசை மற்றும் பௌர்ணமி” திடீரென நடக்கும் மாற்றங்கள்…. கடல் உள்வாங்கியதால் பரபரப்பு…!!

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் 50 அடி  உள்வாங்கியுள்ளது.

சர்வதேச சுற்றுலா தளமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டது. அதிலிருந்து குமரி கடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

இந்த மாற்றங்கள் குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மட்டுமே நிகழ்கிறது. இந்த தினங்களில் கடல் சீற்றம், நீர்மட்டம் ஏற்றம் மற்றும் இறக்கம், கடல் கொந்தளிப்பு போன்றவைகள் நிகழ்கிறது. இதேப்போன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் கடல் 50 அடி உள்வாங்கியது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் இருக்கும் பாறைகள் வெளியே தெரிகிறது.

Categories

Tech |