Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் பிறந்த குழந்தை…. புதரில் வீசி சென்ற அக்கா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஓடும் ரயிலில் பிறந்த குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரமச்சூர் ரயில்வே தண்டவாளம் அருகில் இருக்கும் புதரில் ஆண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புதரில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் ராணி என்ற பெண் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஜோஸ் ராணிக்கு குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஜோஸ் ராணி மயக்க நிலையில் இருந்ததால் அவரது அக்கா இஸ்மாலா தங்க ராணியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஜோஸ் ராணிக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ராணுவ வீரரான சைமன் என்பவருடன் தங்கராணிக்கு திருமணமாகி அவர் தற்போது பூனாவில் இருக்கிறார். இந்நிலையில் அக்கா தங்கை இருவரும் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்ற போது ஜோஸ் ராணிக்கு ஓடும் ரயிலில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தங்கராணி குழந்தையை ஓமலூர் அருகே புதரில் வீசி சென்றுள்ளார். அதன் பிறகு உடல் நலம் மோசமானதால் ஜோஸ் ராணியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து குழந்தையை ஜோஸ் ராணியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |