இலங்கையில் இந்த ஆண்டிற்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஜெனரல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும் இருந்து வந்த ஜெய் ஷா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பதவி ஏற்றிருந்தார்.
அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. ” என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் இந்த பதவிக்கு தேர்வு செய்ததற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜெய் ஷா கூறினார்.