Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் மீண்டும் தொடங்கப்படும் என   அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக போக்குவரத்துகள் முடங்கியது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மிகுந்த அவதிப்பட்டனர். இதன் காரணமாக மத்திய அரசு மாணவர்கள், யாத்திரீகர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆகியோருக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. இதைத்தொடர்ந்து கொரனோ பரவல் குறைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் சில ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. இதில் தெற்கு ரயில்வே நிர்வாகமும் தங்களுடைய எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்காமல்  இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி திருப்பதி-புதுச்சேரிக்கு காலை 4.20 மணிக்கும், புதுச்சேரி-திருப்பதிக்கு மதியம் 2 .55 மணிக்கு புறப்படும். இதன்பிறகு சூலூர்பேட்டை- நெல்லூர் பகுதிக்கு 3.50 மணிக்கும், நெல்லூர்-சூலூர் பேட்டை 6:50 இருக்கும் ரயில்கள் புறப்படும். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவிலுக்கு காலை 6.50 மணிக்கும், நாகர்கோவில்-திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு மாலை 6.20 மணிக்கும் இயக்கப்படும். இதன்பிறகு சூலூர் பேட்டை-மூர்மார்க்கெட் பகுதிக்கு இரவு 8.45 மணிக்கும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை பகுதிக்கு மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும். மேலும் முன்பதிவில்லா ரயில்கள் ஏப்ரல் 1-ம் தேதி இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |