மசாஜ் என்ற பெயரில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் குடும்பத்துடன், இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது டெல்லியை சுற்றிப் பார்த்துவிட்டு ஜெய்ப்பூருக்கு வந்த அவர், அங்கு உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆயுர்வேத மசாஜ் செய்ய விருப்பம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு பிரபலமான ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டரை, செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின் அவரது அழைப்பை ஏற்று அவரது அறைக்கு, அந்த மசாஜ் செய்யும் நபர் வந்துள்ளார்.
அந்த மசாஜ் செய்யும் நபர் கேரளாவை சேர்ந்த பிஜூ முரளிதரன் என்பவராகும். இதையடுத்து மசாஜ் செய்வதற்காக வந்த அந்த நபர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அந்தப் பெண் ஜெய்ப்பூர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
உடேன அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மருத்துவ பரிசோதனை அந்தப் பெண்ணுக்கு செய்ததில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதை அடுத்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண், மசாஜ் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்த பிஜு முரளிதரனை என்பவரை போலீசார் கைது செய்து, பின் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.