Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… “தெய்வ நம்பிக்கை கூடும்”… சாதிக்கும் திறமை அதிகமாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே …!!!இன்று சொந்தங்களில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சினால் அதிருப்தி கொஞ்சம் உருவாகலாம். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பு தேவை. ,ஒவ்வாத உணவுகளை தயவு செய்து கொள்ள வேண்டாம். அரசு உதவி கிடைப்பது கொஞ்சம் தாமதம்  இருக்கும் .இன்று  வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். உத்தியோகத்தில்  சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை இருக்கும். சக ஊழியரிடம் கவனமாக பேசுங்கள். வெளிநாட்டு பயண வாய்ப்பு இன்று கிடைக்கக் கூடும். சில கலைத் துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமையும் அதிகமாகும். இன்று  பயணம் மேற்கொள்வதால் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள்  .வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

ஓரளவு பண வரவையும் மனம் நிம்மதி குறிப்பிடும். ஏதும் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அதிர்ஷ்டம்  கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்ன  தானமாக கொடுங்கள் .உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் :7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :நீலம் மற்றும் மஞ்சள்

நட்சத்திர பலன்கள் :

புனர் பூசம்:இன்று வெளி ஊரிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும் .வெளிநாட்டு வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.தனவரவை பொருத்தவரை எந்த பிரச்சினை இல்லை .

பூசம்:இன்று  உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் .சுற்றுலா சென்று வருவதில் ஆர்வமாக இருப்பீர்கள். எதிர்பாராத சின்ன, சின்ன சிக்கல்களை சந்திக்க கூடும்.

ஆயில்யம் :இன்று தெய்வீக நம்பிக்கை கூடும் .சரியான முடிவுகளை எடுக்கக் கூடும் .வெளிநாட்டு பயண வாய்ப்புகள்கிடைக்க கூடும்.  எதையும் சாதிக்கும் திறமை அதிகரிக்கும்.

Categories

Tech |