Categories
உலக செய்திகள்

பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள்…. வாடிகன் சட்டத்தில் சீர்திருத்தங்கள் அறிவித்த போப் ஆண்டவர்….!!!

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், புதிய சீர்திருத்தங்களை வாடிகன் சட்டத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு எதிராக போராட முக்கியத்துவம் வழங்கக்கூடிய விதத்தில் வாடிகன் சட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சீர்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார். அதன்படி, ‘நற்செய்தியை அறிவித்தல்’ என்னும் தலைப்பில் 54  பக்கங்களுடைய சீர்த்திருத்த சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

சமீப நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள், கார்டினல்கள் போன்றோர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. எனவே, போப் ஆண்டவர் பிரான்சிஸ் இந்த சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |