உக்ரேன் அதிபர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள பொம்மைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்க நாட்டில் சிகாகோவுக்கு அருகே உள்ள நெப்பர்வில்லே என்ற இடத்தில் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை ஜோ துருபியா என்பவர் நடத்தி வருகிறார். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி உதவ எண்ணியுள்ளார். இதனால் அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பொதுமக்களின் போர் ஆயுதங்களாக மாறியுள்ள பெட்ரோல் குண்டு வடிவில் பொம்மைகளை செய்து விற்பனைக்கு அனுப்பியுள்ளார்.
இந்த பொம்மைகளை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் 1,45,000 டாலர் நிதி திரண்டுயுள்ளது. மேலும் இந்த நிதியை உக்ரேன் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துப் பொருள்களை வாங்கி அனுப்ப உள்ளதாக ஜோ துருபியா கூறியுள்ளார்.