மல்லாபுரம் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள குளிர்பானத்தை குடித்து சிறுமி உயிரிழந்த நிலையில் பாட்டி தீவிர சிகிச்சையில் உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜின் தாய் லட்சுமியும் மகள் வரலட்சுமியும் தனது வீட்டிற்கு அருகே உள்ள குளிர்பானத்தை எடுத்து நான்கு தினங்களுக்கு முன்பு குடித்துள்ளனர். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிறுமி ரச்சனா உடல்நிலை மிகவும் மோசமானதால் வேற ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சொல்லும் பொழுது உயிரிழந்துவிட்டார். சத்யராஜின் அம்மா லட்சுமி வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரித்ததில் குளிர்பானத்தில் விஷம் கலந்து யாரோ வீட்டின் அருகே வீசி சென்று இருப்பதாக தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.