அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக மாறி அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று அவதி பட கூடாது என்பதற்காக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
Categories