Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள “அசானி” புயல்….. இந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல், அந்தமான் நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு “அசானி” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த புயல் அந்தமான நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும் படி இந்திய கடலோர கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |