தனியார் பேருந்து கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்து 25க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்திலும் தும்கூரு மாவட்டத்தில் உள்ள பவகடாவில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து நடந்துள்ளது. பவடகடாவிலிருந்து யல்லப்பா நயாகன ஹோசகோட் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பேருந்துக்குள் அறுபது நபர்களும் பேருந்தின் மேல் சிலரும் பயணம் செய்தலால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த பேருந்தில் மாணவர்கள் பெரும்பாலானோர் பயணித்துள்ளனர். இந்நிலையில் நிகழ்வு நடந்த இடத்திலேயே எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை செய்தபோது பஸ்ஸில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.