Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி செல்லியம்மன் கோவில் தெருவில் ஜெயகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்ட பா. ஜ தொழில் நுட்ப பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஜெயகிருஷ்ணன் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஜெயகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் செல்வகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |