தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களை தொந்தரவு செய்யலாம். சூழ்நிலையை உணர்ந்து கொஞ்சம் செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று செயல்களில் கொஞ்சம் வேகம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கலாம்.
எதிர்ப்புகள் நீங்கும், தொழில் போட்டிகள் குறையும். வெளியில் பயணம் செல்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை போன்றவை இடமாற்றம் போன்றவை ஏற்படும். அலைச்சல்கள் கூட கொஞ்சம் இருக்கும். இன்று பெண்களின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். கையில் காசு புரளும் கவலை வேண்டாம். இன்று முடிந்தால் தெய்வீக நம்பிக்கை இருப்பது ரொம்ப அவசியம்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஏற்படும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்குத் திசை
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்