Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 24ஆம் தேதி வரை…. யாரும் போகாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக மாறி அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று அவதி பட கூடாது என்பதற்காக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் மார்ச் 24ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடல், தென்கிழக்கு, வட கிழக்கு வங்க கடலில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |