Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரி பின்புறம் வீடுகள்…. 54 பேருக்கு நோட்டீஸ்…. ஆட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!.

கிருஷ்ணகிரி, தர்மபுரி  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரி பின்புறம் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி-தர்மபுரி  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரி பின்புறம் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வீடுகட்டி உள்ள 54 பேருக்கு இடிக்க இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் அதிகாரிகள், இந்த பகுதியில் உள்ள 20-க்கும்  மேற்பட்ட வீடுகளின் சுவர்கள்,  ஷெட்டுகள் நிலங்களில் விளைந்த இருந்த பயிர்கள் முதலியவற்றை  பொக்லைன் மூலம் அகற்றினர்.

அப்போது  அந்த  இடத்தில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், தாசில்தார் சரவணன், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் காளிபிரியன் மற்றும் வருவாய்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் இருந்தனர். இந்த பகுதியில்  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை முன்னிட்டு கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Categories

Tech |