அமெரிக்க தூதரகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவின் வடக்கே உள்ள மொராக்கோ நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு அதிபர் ஜோ பைடன் புனித் தல்வாரை நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் வாஷிங்டனில் வசித்துவரும் இவர் தற்போது மூத்த ஆலோசகராக அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை ஆகியவற்றின் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கொள்கை வகுப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெண் பையுடன் மையத்தின் வருகை தரு பேராசிரியராகவும், ஆசிய சமூக கொள்கை நிறுவனத்தின் நிர்வாக குழுவின் மூத்த உறுப்பினராகவும் இயங்கி வருகிறார்.