உலக சுகாதார அமைப்பானது கொரோனா பற்றி தவறான தகவல்கள் மக்களிடையே பரப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறது.
உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஹாங்காங் சீனா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது.
எனவே, அந்நாடுகளில் கொரோனா விதிமுறைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பானது, கொரோனா பற்றி மக்களிடையே சில தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பினுடைய கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை அதிகாரியான மரியா வான் தெரிவித்திருப்பதாவது, ஓமிக்ரான் மாறுபாடு குறைந்த பாதிப்புகளை உண்டாக்கும் என்பது தவறானது. மேலும் கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டது, ஒமிக்ரான் தான் கொரோனாவின் கடைசி மாறுபாடு போன்றவை தவறான தகவல்கள் என்று தெரிவித்திருக்கிறார்.