கோவையில் இருந்து செல்லும் மெமோ ரயில்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு முதல் கோவை, ஈரோடு முதல் பாலக்காடு, சேலம் முதல் கோவை உள்ளிட்டவைகளில் உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் குறைந்த கட்டணத்தில் செல்லும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஈரோட்டில் இருந்து கோவைக்கு 7:15 மணிக்கும் மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து ஈரோடிற்கு 6.40 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக இரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.