பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு பற்றாக்குறையான பயண அட்டைகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தில் 1000 ரூபாய் பயண அட்டை கையிருப்பில் இல்லை. இதன் காரணமாக அதற்கு பதிலாக மாற்று அட்டை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளில் காலநீட்டிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயண சீட்டுகளில் க்யூ ஆர் கோடு இடம்பெற்ற புதிய வில்லைகள் ஒட்டி கொடுக்கப்படுகிறது. எனவே புதிய பயணச்சீட்டுகள் வரும் வரை இந்தச் சீட்டுகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.