நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ‘மாண்புமிகு’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தை டி.எஸ்.எஸ்.மணி எழுதியுள்ளார். தொழில் அதிபர் டி.எம்.நடேசன் தலைமை தாங்கிய இந்த விழாவில் கனிமொழி எம்.பி., நூலை வெளியிட்டுள்ளார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நூலை பெற்றுள்ளார். மேலும் நூல் ஆசிரியர் டி.எஸ்.எஸ்.மணி ஏற்புரை வழங்கினார். இந்த விழாவிற்கு வந்தவர்களை கவிஞர் துரை பாரதி வரவேற்று பேசினார்.
இதனை தொடர்ந்து எழுத்தாளர் கலா பிரியா, இளைய பாரதி, தாவூத் மியாக்கான், ஷீலு பிரான்சிஸ், கிரேஸ் பானு, நாராயணசாமி, கமலிகா காமராஜ், ஆசிரியர் செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன் முடிவில் ஜமால் முகமது ஈசா நன்றி கூறினார். தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வந்த கனிமொழிக்கு, கே.டி.சி. நகரில் தி.மு.க. உறுப்பினர்கள் வரவேற்றனர்.