நடிகை மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகையாக வலம் வருகின்றார் மஞ்சிமா மோகன். அண்மையில் இவரும் பிரபல நடிகரும் காதலிப்பதாக வதந்தி பரவி வந்த நிலையில் அதை மறுத்து ஊடகமொன்றிற்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்த திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
https://www.instagram.com/p/CbPRdsFLBsw/?utm_source=ig_embed&ig_rid=0fc579b4-8fef-4a46-936d-447fb63230b9&ig_mid=FBF75049-B0B2-4FAE-B02B-AB8B0EF69782
இந்நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மனோ ஆனந்த் அடுத்த படத்திற்கு தயாராகி , உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. இந்த அறிவிப்பை மஞ்சுமா மோகன் இணையத்தில் பகிர்ந்து மனோ ஆனந்திடம் இயக்குனராக சேர வேண்டும் என்றால் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். “நான் இதற்காக விண்ணப்பித்தேன் ஆனால் அவர் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.