Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான சக்திவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேல் தனதுமோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சக்திவேல் கயத்தாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் இன்பராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் இன்பராஜை கைது செய்ததோடு அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |