கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் வேலுசாமிபுரம் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபடும் போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சரன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 50 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.