Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற ராணுவ வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது புள்ளியியல் துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜா பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென ராஜா மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |