Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இங்கு ஏன் வந்தார்….? சடலமாக மீட்கப்பட்ட கேரள வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கேரள மாநில வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் கருப்பசாமி கோவிலுக்கு பின்புறம் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வாலிபரின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வினோத் என்பது தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தில் ஷேர் மார்க்கெட்டிங் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வினோத் கேரளாவிலிருந்து ஏன் சிவகிரிக்கு வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |