புயலின் காரணமாக முக்கிய பல துறைமுகங்களில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புயல் காரணமாக வருகிற 22-ஆம் தேதி வரை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக தூத்துக்குடி, நாகை, பாம்பன், காரைக்கால், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் சென்னை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.