Categories
சினிமா செய்திகள்

பிரபல நடிகை பாவனா “மீண்டும் ரீ-என்ட்ரி”… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!

ஐந்து வருடங்களாக நடிப்புக்கு தடைபோட்ட நடிகை பாவனா தற்போது ரி-என்ட்ரி கொடுக்கின்றார்.

மலையாளம், தமிழ், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் பாவனா. இடையில் இவர் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மலையாளத்தில் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை மம்முட்டி முதலில் இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

அவரை தொடர்ந்து பாவனாவும் இதை வெளியிட்டு ரீஎன்ட்ரி கொடுப்பதை உறுதி செய்தார். இத்திரைப்படத்தை ஆதில் மைமுனத் அஷ்ரப் இயக்குகின்றார். காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |