வாடகை வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்திய பெண் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்நாங்குப்பம் அருகாமையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு விபசாரம் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் ஒரு பெண்ணும், ஆணும் பாலியல் தொழில் நடத்தி வந்ததும், அவர்களை தவிர வாடிக்கையாளர்களாக வந்த 4 ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து குடும்ப வறுமையால் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 2 பெண்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 மாதங்களுக்கு முன்பாக பால்நாங்குப்பம் அருகாமையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு இரண்டு நாட்களாக விபச்சாரம் நடத்தி வந்திருக்கின்றனர். மேலும் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளை மாற்றி பல பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.