கமர்சியல் ஹீரோவான விஜய் சுந்தர்சி திரைப்படத்தில் நடிக்காததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்களிடையே நின்று பேசியது.
விஜய்யிடம் இயக்குனர்கள் கதை சொல்ல வேண்டும் என்றால் மூன்று மணி நேரம் படத்தின் முழு திரைக்கதையையும் சொல்லவேண்டும். ஆனால் சுந்தர்.சி ஒரு வரி கதையை தான் சொல்லுவார். கார்த்தி நடித்த “உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்தாராம். கதையை சொன்ன உடன் விஜய்க்கு பிடித்து போனதாம். விஜய் முழு கதையையும் கேட்ட போது சுந்தர் சி எனக்கு அந்த பழக்கம் இல்லை என்று கூறியுள்ளார். இந்த காரணத்தால் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது. இதனாலேயே இருவரும் இணைந்து பணியாற்ற முடியாமல் இருக்கின்றது.