தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஊரணிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பால்சாமி வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது ஊரணி கரையில் பால் சாமியின் ஆடைகள் இருந்ததை பார்த்து உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பால்சாமியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குளிக்க சென்ற பால்சாமி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்துள்ளது.