சென்னை அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் 40 அடி உயரத்தில் கோபுர விளக்கு உள்ளது.
இதன் உச்சியில் இருந்த மின் விளக்குகள் திடீரென நேற்று மாலை பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. அதன் அடிவாரத்தில் இருந்த பூ மற்றும் பழ கடை வியாபாரிகள் டீ குடிக்க சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
இதை கண்ட அக்கம்பகத்தினர் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது குறித்து அறிந்த மாநகராட்சி அதிகாரி உடைந்த மின் விளக்குகளை அப்புறப்படுத்தினர். மேலும் 2 நாட்களில் மீண்டும் மின் விளக்குகள் பொருத்தப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.