Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கார்-கல்லூரி பேருந்து மோதல்…. தம்பதியினர் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

கார் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் முத்துக்குமார்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் உறவினரான பெரியக்காள் என்ற மூதாட்டியை அழைத்துக்கொண்டு தென்காசியில் இருக்கும் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை முத்துக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, முத்துக்குமாரின் காரும் தனியார் பெண்கள் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்த கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் ராமசாமி, மாணவிகளான விஜயலட்சுமி, அபிநயா, ஹரிப்பிரியா, திவ்யா, ஜெய வீரலட்சுமி ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |