வெடிமருந்து வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தர்மபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரப்பட்டரை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மாமியார் ராமலட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட பட்டாசு விபத்தில் மாணவி பலியானார். இதுதொடர்பாக ராமலட்சுமி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ராஜேந்திரன் பட்டாசுகளை தன்னுடைய வீட்டின் அருகே குழிதோண்டி பதுக்கி வைத்துள்ளார். இந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதனால் அப்பகுதியில் இருந்த 5 வீடுகள் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் ராஜாத்தி மற்றும் அவருடைய மகள் ஆஷா ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆஷா மற்றும் ராஜாத்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.