தனுசு ராசி அன்பர்களே…! அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகமாக பேச வேண்டாம்.
சக ஊழியர்களின் வேலையை நீங்கள் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். பணவரவு சுமாராக தான் இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பணக்கஷ்டம் ஓரளவு தீரும். சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் நீங்கள் செயல்படுவீர்கள்.தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்தில் நல்ல ஆதரவு இருக்கும். வீடு வாய்ப்பு வசதியாக அமையும். வீடுமாற்றம் சிந்தனை மேலோங்கும். கற்பனை திறன் அதிகரிக்கும். வெற்றி குவியும்.வியாபாரம் தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். மந்தமான போக்கு மாறி லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். லாபத்தை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
காதலின் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்படும். மாணவக் கண்மணிகளுக்கு நல்ல விஷயம் நடக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர்நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.