Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு சேவையா?…. 30 ரூபாய் மட்டுமே வாங்கும் மருத்துவமனை… எங்கு தெரியுமா..?

மன்னார்குடியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில்  ரூ.30 கட்டடத்தில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எம்ஐடி ஹெல்த்கேர் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா ஆகியோர்  மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலம் பெறும் நோக்கில் மண்ணை இஸ்லாமிய தோழமைகள் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் முதற்கட்டமாக மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு கட்டணமாக ரூபாய் 30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் நாள்தோறும் 5 மணி முதல் 8 மணி வரை பொதுமருத்துவம் வாரம் ஒருமுறை மகப்பேறு சேவை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 30 ரூபாய் என மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன்பெற பெரும் உதவியாக அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |