Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலையில் நடைபெற்ற மோசடி… ஒரே கிராமத்தில் இத்தனை கோடி சுருட்டலா?…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வாய்க்கால் அமைக்காமல் ஒரு கோடியே 36 லட்சம் போலி பில்கள் மூலம் எடுக்கப்பட்டது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் ஒன்றியத்திற்குட்பட்ட இளங்காடு ஊராட்சியில் 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இளங்காடு ஊராட்சியில் உள்ள குடுமியான்குப்பம் மற்றும் பெத்துரெட்டிக்குப்பம் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஏரி கால்வாய் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்போது வரை வாய்க்கால் இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர்களுக்கு பாசன கால்வாய் புதிதாக ஏற்பாடு செய்யவேண்டும் என அரசுக்கு பல்வேறு மனுக்களை எழுதி அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும்  விவசாயி பாஜக விழுப்புரம் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் பிரமுகருமான கார்த்திக் முயற்சி  செய்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த பகுதியில் ஏற்கனவே1.36 கோடி மதிப்பில் பாசன கால்வாய் வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. வட்டார வளர்ச்சி அலுவலரை ஒப்புதலோடு பாசன கால்வாய் வெட்டப்பட்டு உள்ளதாக பிடிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அதுகுறித்து ஆவணங்களை வழங்க மறுத்ததால் கார்த்திக்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் திரட்டி ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த   தகவலின் படி ஒரு கோடியே 36 லட்சம் வாய்க்கால் கால்வாய் பணிக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அமர்வு12.07.2021 அன்று முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அதில் மாவட்ட ஆட்சியர் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் போன்றோர் சம்பந்தப்பட்ட புகார் குறித்து விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை மாவட்ட ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இது தொடர்பாக நமது செய்தியாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் திட்ட அலுவலர் ஜோசப் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. அதனோடு மனு அளித்த கார்த்திக்கிடம் சமரசம் பேச முயற்சி செய்து வந்துள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வெட்டாத வாய்க்காலுக்கு ரூ.1.36 கோடி பணத்தை ஊழல் செய்துள்ள ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட ஆட்சியர் காலம் தாழ்த்தி வருவது அரசு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாக வேதனை தெரிவித்துள்ள கார்த்திக், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆவணங்கள் மூலம் பல கோடி மோசடி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Categories

Tech |