நிலைத்தடுமாறி டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரா என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். இவர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சென்றபோது திடீரென டிராக்டர் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.