திமுகவினரின் புதிய திட்டத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திருமணத்திற்கு மொத்தம் ஐந்து நிதி உதவி திட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து,மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது தாலிக்கு தங்கம் வழங்கும் இத்திட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் முன்னதாகவே விளக்கமளித்துள்ளார், “கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம் என ஐந்து வகையான நிதியுதவித் திட்டங்கள் மூவாலூர் ராமாமிர்தம் நினைவு தினத்தில் உள்ளன. இதில் மூவலூர் ராமாமிருதம் தங்கத்துக்கு தாலி வழங்கும் நிதி உதவித் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் உயர் கல்விக்கு அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் வறுமை காரணமாக 46% பேர் தான் செல்கின்றனர். அனைவருக்கும் கல்வி தான் அவசியம்.
இந்த நிலையில் பயணாளிகளை சரியாக மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தில் தேர்வு செய்ய முடியவில்லை என்றதால் இதனையெல்லாம் கருத்தில் கொண்ட அத்திட்டம் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளியில் பயின்று தனது உயர் கல்வி படிப்பை முடிக்கும் மாணவியருக்கு மாதம் 1,௦௦௦ ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆனாலும் மற்ற 4 நிதியுதவித் திட்டங்களும் தொடர்ந்து செயல்படும்.
இந்த நிலையில் மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்குதான் திருமண நிதியுதவி திட்டம் வழங்கபடுகிறது. ஆனால் மாற்றி அமைக்கப்பட்ட இந்த திட்டத்தால் வருடத்திற்கு 6 லட்சம் பேர் பயனடைவர். இந்த நிலையில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரி சென்று படிக்கும் மாணவியருக்கு அவர்கள் படித்து முடிக்கும்வரை நிதி உதவி வழங்கப்படும். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதன் மூலம் தங்கத்தை வைரம் ஆக்குகிறோம்.
மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் பயணாளிகளுக்கு தங்கம் சரியாக கிடைக்கவோ, செயல்படுத்தப்பட்ததோ, இத்திட்டத்திற்காக வாங்கிய தங்கத்தை என்ன செய்தார்கள் என்பதோ தெரியவில்லை” என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதற்கிடையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்த பயணாளிகளின் நிலை என்ன அவர்களுக்கு உள்ள சலுகைகள் கிடைக்குமா அல்லது அவர்களுக்கும் சேர்த்து தாலிக்கு தங்கம் ரத்து செய்யப்படுமா.
மேலும் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மேற்படிப்புக்கு செல்ல முடியாமல் இதுவரை திருமணமாகாமல் இருக்கும் பெண்கள் விரைவில் திருமணம் செய்யும் நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் இந்த புதிய திட்டத்தினால் ரூபாய் 1000 த்தையும் பெறமுடியாமல் பழைய திட்டத்தின்படி தாலிக்கு தங்கம் திட்டத்தின் ரூபாய் 5௦, ௦௦௦ மும் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசின் இந்தத் திட்டத்திற்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் புதிய திட்டத்தின்படி ஆயிரத்துடன் திருமணத்தின் போது தாலிக்கு தங்கமும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.