நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்னையில் உள்ள மணலி பகுதியில் இருந்து 20 பேர் வேனில் வந்துள்ளனர். இந்த வேனை அருண்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த வேன் மேலரெடிகுப்பம் அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில் நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ரோசனை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கிய 15 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.