Categories
தேசிய செய்திகள்

கிட்னிகாக இப்படியா….? பிஞ்சு குழந்தையை திருடிய பெண்கள்…. அதிரடியாக மடக்கிய போலீஸ்….!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியை சேர்த்தவர் ரஷித் மற்றும் சபீனா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த சபீனாவை கடந்த 14 தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டத்தோடு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் நேற்று காலை4 மணியளவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் பிரசவ வார்டில் நுழைந்து சபீனாவின் குழந்தையை கடத்தி சென்றார். திடிரென கண் விழித்து பார்த்த சபீனா குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளார். ஆனாலும் குழந்தை கிடைக்காததால் புகார் அளிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர்   மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி சிடிவி கேமராவை ஆய்வு செய்த போது பர்தா அணிந்த பெண் ஒருவர் சபீனாவின் குழந்தையை எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் என அணைத்து இடங்களிலும் அந்த பெண்ணை தேடி வந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து பர்தா அணிந்த பெண் ஒருவர் வெளியேறுவதை கண்டு அவரை பிடித்து விசாரித்த போது அவர் சந்தைப்பேட்டையை சேர்ந்த பவித்ரா என்பதும் கிட்னிக்காக  குழந்தையை கடத்தி ஒரு பெண் மருத்துவரிடம் ஒப்படித்தது  தெரியவந்தது. மேலும் அந்த பெண் விசாகபட்டினத்திற்கு சென்று கொண்டிருப்பதை  அறிந்த போலீசார் அணைத்து காவல் நிலையங்களிலும் தகவல் தெரிவித்து அந்தப்பெண்ணை மடக்கிப்பிடித்தனர்.

இந்நிலையில் குழந்தையை கடத்தி வந்து கொடுத்தால் ரூ.20 லட்சம் தருவதாகவும் அதற்காக முன்பணமாக ரூ.50 ஆயிரம் வங்கியுள்ளதும் தெரியவந்தது . பிறகு அந்த பெண்ணிடம் இருந்து  குழந்தையை மீட்டு சபீனாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை கண்ட பெற்றோர் முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர். குழந்தையை கடத்திய பெண்ணையும் டாக்டரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |