Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் ஏவுகணை தாக்குதல்…. கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழப்பு…!!!!

உக்ரைன் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டிலுள்ள ஜைட்டோமைர் என்ற பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்குரிய பயிற்சி மையம் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் பிற நாட்டை சேர்ந்த கூலிப்படையினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த பயிற்சி மையத்தின் மீது துல்லியமாக ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது.

இதில் அந்த கூலிப்படையை சேர்ந்த 100 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் ஆயுத படைக்கான சிறப்பு நடவடிக்கை பயிற்சி மையத்தில் உயரிய ஏவுகணைகள் வீசப்பட்டது. இதில் உக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்த பிற நாட்டை சேர்ந்த கூலிப்படையினர் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கிறது

Categories

Tech |