Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள்…. மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறதா  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானுர் அருகே பெரியார்  சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு குடிநீர் குழாய், மழைநீர் சேகரிப்பு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது முழுமையாக முடியும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை அடுத்தமாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மோகன் வீட்டின் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, திட்ட இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர்  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தரமாக முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Categories

Tech |