2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன.
அந்த வகையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தின் மீதான விவாதத்தின்போது பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் உட்பட மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். 10 மாதத்தில் திமுக அரசு உயர்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.