கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு பெண் உள்பட 2 பேர் பலி.
ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாநிலத்தின் லால் புர் மாவட்டத்தில் இடைவிடாத கனமழை பெய்தது. கனமழையால் இந்த மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வெள்ளப் பெருக்கினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.
இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அவைகளும் இரந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.