Categories
மாநில செய்திகள்

வெளியான திடீர் உத்தரவு… அதிர்ச்சியில் ரேஷன் ஊழியர்கள்…!!!!

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக வேலை நேரத்தை அமைத்துக் தகுந்த  சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சென்னை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க தலைவர் ஜி ராஜேந்திரன் மற்றும் பொது மாநில செயலாளர் தினேஷ்குமார் போன்றோர் கூறியிருப்பதாவது, பொதுவிநியோகத் திட்ட நியாய விலை கடைகள் வேலை நேரம் குறித்து ந.க.எண்: இசி 2/4492/ 2022 நாள் 25/02/2022 ன்படி சுற்றறிக்கை வரப்பட்டுள்ளது.

இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலை நேரம் மாறுதல் செய்ய கோரியும் மற்ற பகுதிகளிலும் வேலை நேரத்தில் அவர்கள் செய்த ஒரே மாதிரியான வேலை நேரத்தை அறிவிக்க வேண்டும். பணியாளர்கள் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளவற்றை போக்குமாறும் கீழ்கண்டவாறு தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் எந்த நேரமும் இந்த கடைகளில் பொருட்களை பெறலாம் என்ற நிலையில் சிரமமில்லாமல் பொருட்களை பெற்று செல்கின்றனர். மேலும் பயோமெட்ரிக் அமல்படுத்திய நிலையிலும் அனைத்து கடைகளிலும் உள்ள நிலையிலும் டிஎன்பிடிஎஸ் என்று கடைகளில் இருப்பு தன்மை குறித்து அறிந்து கொண்டு பொருட்கள் வாங்கக் கூடிய ஏதுவான நிலையில் உள்ள பொருட்கள் சிரமமின்றி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நியாயவிலை கடைகள் வெள்ளிக்கிழமைகள் விடுமுறையாக இருந்தாலும் நுகர்பொருள் வாணிப கழகம் கிழங்குகள் வேலை நாளாக இருப்பதால் அன்று பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதால் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில பணியாளர்களை தவிர சுமார் 90 சதவீதத்துக்கும் மேல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் பணிபுரிய வேண்டிய நிலையில் அவர்கள் 7.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் வீடு திரும்ப இரவு 8.30 மணி ஆகிவிடுகிறது. ஆகவே மொத்தம்  12 மணிநேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மதிய இடைவேளை இரண்டரை மணி நேரம் இருக்கும் சூழ்நிலையில் அரை மணி நேரம் உணவு தவிர மீதி இரண்டு மணி நேரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது பணியாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் இடைவெளி நேரம் ஒரு மணி நேரமாக இருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் சரியாக 8.30 மணிக்கு வருவதற்கும், இரவு 7 மணிக்கு மேல் விற்பனை தொகையை எடுத்து செல்வதில் உள்ள இடர்பாடுகளையும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் வேலை நேரம் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணிவரையிலும் 1.30 மணி  முதல் மாலை 5 மணி வரை இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வேலை நேரம் அமைந்திடவும் தகுந்த  சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |