Categories
தேசிய செய்திகள்

“அசானி  புயல் எதிரொலி”…. கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் வெளியேற்றம்…. வெளியான தகவல்…..!!!!

“அசானி  புயல்” காரணமாக அந்தமான் நிகோபாா் தீவுகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு உள்ள கடலோரம் பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனா். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நிகோபாா் தீவுகளிலுள்ள காா் நிகோபாரின் வடக்கு – வடமேற்கே சுமாா் 110 கி.மீ. தொலைவில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அந்தமான் நிகோபாா் பேரிடா் மேலாண்மைச் செயலா் பங்கஜ்குமாா் மற்றும் அதிகாரிகள் கூறினர். அதாவது போா்ட்பிளோ் உட்பட வடக்கு மத்திய, தெற்குஅந்தமான் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேற்றப்பட்டு 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். சுமாா் 150 தேசிய பேரிடா் மீட்புப்படை வீரா்கள் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்த வருடத்தில் உருவாகும் முதல் புயல் என்று தெரிவித்தனா். வங்கதேசம்-மியான்மா் கடலோரப் பகுதிகளை நோக்கி புயல் நகரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கூறினர்.

Categories

Tech |