Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இந்நிலையில் திருப்பூரில் ரேஷன் கடைகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறதா?.. என்று பேரவையிலே எம்எல்ஏ செல்வராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி “உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலித்து 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிக்க அரசு தயாராக இருக்கிறது. 150 ரேஷன் கார்டுகளுக்கு பகுதிநேர கடைகளும், 200 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழுநேர கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |