Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தண்டனை தேதி மாற்றம்?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரின் தூக்கு தண்டனை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் காவலர்களால் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்பதால் அவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் வெளிவந்துவிட்டான்.

மற்றொருவர் சிறைக்குள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களை வருகிற 22ஆம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்தது.

இந்த நிலையில் அவர்கள் கருணை மனுக்களை அளிக்க இன்னமும் கால அவகாசம் இருப்பதாக மாநில அரசின் வழக்குரைஞர் கூறினார். இதையடுத்து நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நால்வரும் வருகிற 22ஆம் தேதி தூக்கு கயிற்றில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளனர். இதற்கிடையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு மற்றொரு தேதியில் தண்டனை நிறைவேற்றப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |