2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக கோல்டன் ஹவர்ஸ்க்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்து, உயிரை காக்கக்கூடிய மனிதநேயப் பண்பாடு பணியாற்றுபவர்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழ் மற்றும் ரூபாய் 5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் ஆகிய திட்டங்களின் மூலம் 33,247 பேர் இலவச சிகிச்சை பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.